Author Topic: காதல் கடிதங்கள்  (Read 779 times)

Offline thamilan

காதல் கடிதங்கள்
« on: May 19, 2021, 08:18:36 PM »
பிரியமானவளே
நான் படிக்க நினைத்த
பருவ இலக்கியம் நீ

இன்று யாரோ உன்னை படித்துக்கொண்டிருக்க
நானோ உனது பழைய
கடிதங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்

என் வாழ்க்கையில் நீ கிடைக்கவில்லை
உனது கடித்தாங்களே கிடைத்தன
நம் காதலின் நினைவுச் சின்னங்களாக
இன்னும் எஞ்சி இருப்பது
எனது எண்ணங்களும்
உனது கடிதங்களும்  மட்டுமே

உன் கடிதங்கள் யாவும்
எனது இதயத்தில் நீ
தீட்டிய காதல் கல்வெட்டுக்கள்
இந்தக் காதலே
எனது இதயத்தில் விழுந்த
கல்-வெட்டுதான்

உன் கடிதத்தில் நான் பார்ப்பது
உன் எழுத்துக்களை அல்ல
உன் இதயத்தை
இதயத்தியே கடிதமாக அனுப்பிய
காதலி நீ மட்டும் தான்

அன்று
உனது கடிதங்களுக்காக ஏங்கினேன்
இன்று
உனக்காக.....

காதல் என்னை கிழித்தது
காலம் என்னைக் கிழித்தது
வாழ்க்கை என்னைக் கிழித்தது
ஒரு நாள் மரணமும்........
ஆனால்
இந்தக் கடிதங்களை மட்டும்
நான் கிழிக்கவே மாட்டேன்

அன்பே
என்னை நானே எப்படி
கிழிப்பேன் .........