Author Topic: சின்னக்கலைவாணர்  (Read 712 times)

Offline AgNi

சின்னக்கலைவாணர்
« on: April 17, 2021, 11:59:24 AM »


இயற்கையை நேசித்த சின்னக்கலைவாணரே!
நீ பூமியை வளமாக்க
ஆர்வமாய் வலம் வந்தாய்
வான்உலகோ உன் மீதுள்ள
வாஞ்சையால் அழைத்துகொண்டதோ!

கலாமின் விசிறியாகி...அவர்
கருத்துக்களை கூறி
கருத்து கந்தசாமி ஆகினாய்..
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய்
எங்களை தெளிய‌வைத்து..
இன்று அழ வைத்துவிட்டாய்..

நீ மரங்கள் நடவில்லை..
மண் அறம் காத்தாய்!
நீ நகைச்சுவை செய்யவில்லை..
நாங்கள்  வாழ்வை சிந்திக்க
சுவை சேர்த்தாய்...
லட்சம் மரங்களுக்கு நீர் வார்த்தவரே..
போய்வாரும் ..மீண்டும்..
கோடி மரங்கள் நட வேண்டுமே!