Author Topic: பேருந்துப்பயணம்  (Read 731 times)

Offline இணையத்தமிழன்

பேருந்துப்பயணம்
« on: November 09, 2020, 10:20:49 AM »


இரவு நேர்ப்பேருந்துப்பயணம்
மண்மணம்கமிழ மழைச்சாரல்
முன்னிருக்கையில்  அவள் இருக்க
பின்னிருக்கையில் நான்
தென்றலும் அவளை தீண்டிட
அவள் கூந்தலோ என்னை தீண்டிட
என் உறக்கமும் கலைந்ததே
என்விழி அவளையே நோக்கிட
அவள் கடைக்கண் பார்வைக்கே
என்மனம் துடியாய் துடித்ததே
உரக்க சொல்லவும் எத்தனித்தேன்
அருகில் என்தந்தை இருப்பதையும் மறந்து
                                               -இணையத்தமிழன்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….