Author Topic: தனித்திருப்போம் தவிர்த்திருப்போம்  (Read 805 times)

Offline thamilan

கொரோனா
கொல்லாமல் கொல்லும்
சொல்லாமல் தழுவும்
காட்டில் தீ போலே
எளிதாய் பரவிடும்
நாட்டில் ஜனத்தொகையை
இலகுவாய் குறைத்திடும்

ஆணுக்கும் வரும்
பெண்ணுக்கும் வரும்
குமரனுக்கு வரும்
கிழவனுக்கும் வரும்
கொஞ்சம் ஏமாந்தால்
எமனுக்கும் வரும்
வயது வரம்பு பார்க்காது

பணக்காரனுக்கு வரும்
ஏழைக்கும் வரும்
அது பாராபட்சம் பார்க்காது
தாய்க்கும் வரும்
வயிற்றில் குழந்தைக்கும் வரும்
இரக்கமே இல்லாதது
தப்பித்த தவறி வந்துவிட்டால்
மருந்தும் கிடையாது

நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள
விலகியே இருப்போம் 
இடைவெளி ஒன்றே
உயிர் காக்கும் மருந்து
 
நம்மிடம் இருந்து
மற்றவருக்கு வராமல்
மற்றவரிடம் இருந்து
நமக்கு வராமல் இருக்க
தனித்திருப்போம் தவிர்த்திருப்போம்