உன் கையில்
நான் ஒரு புல்லாங்குழல்
வாசித்துப்பார்
வந்தே தீரும் காதல் ராகம்
புல்லாங்குழலை ஊதப்போகிறாயா
இல்லை உடைக்கப்போகிறாயா
உன் கையில்
நானொரு கடிதம்
படித்துப் பார்
புரியும் என் காதல்
கடிதத்தைப் படிக்கப்போகிறாயா
இல்லை கிழிக்கப்போகிறாயா
உன் கையில்
நானொரு கண்ணாடி
அதை உற்றுப்பார்
என்முகம் தெரியும்
கண்ணாடியை பாதுகாப்பாயா
இல்லை தூக்கிப்போட்டு உடைப்பாயா
உன் கையில்
நானொரு வெள்ளைத்தாள்
நீ எழுத நினைப்பது
என்காதலுக்கு முகவுரையா
இல்லை முடிவுரையா
இந்தக் குதிரை
உன்னை நோக்கித்தான் வருகிறது
நீ நினைத்தால்
சவாரியும் செய்யலாம்
கடிவாளமும் போடலாம்
என்ன செய்யப் போகிறாய்