ஆயுளின் அந்தி வரை
அன்பில் நான் வாழ்ந்திடுவேன்
ஆயிரம் காதல் கதை
அவள் விழிகளில் நான் படிப்பேன்
தன்னிலை மறந்து விட்டேன்
தனிமையில் அவளை நினைத்து
என்னுயிர் காதலியே
எனதுயிர் உனக்கு மட்டும்
இதயத்தின் சுமைகளென
வரும் வலிகள்
சில நிமிடங்கள்
என் இரு விழி நீராக
வரும் கண்ணீர் அதை சொல்லும்
இளமை அழகோடு
அவள் இதய கனவோடு
இரவின் பிரிவுகளில்
நினைவின் ஏக்கங்களில்
அவள் காதல் வாழ்ந்திருக்கும்
அழகே
அவள் மட்டுமே இந்த உலகத்தில்
இந்த பூமியிலும் வானத்திலும்
அவள் மட்டுமே
அழகே
அவளுக்காக வாழ்வதும்
சாவதும் எதுவும்
எனக்கு பெருமை
உயிருக்கு நிகரானவள்
அவள் உயிரே உயிரானவள்
நான் என்றால்
நான் தான் அவள்
அவள் என்றால்
அவள் தான் நான்.....
....... சிற்பி...
Presented with my dear