Author Topic: இயற்கையின் இளங்காற்று  (Read 662 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
இயற்கையின் அருட்கொடைகள் ஏராளம்,
அதில் நம் சுவாசிக்கும் சுவாசக்காற்றும் ஒன்று.

காற்றில் தான் எத்துணை அற்புதஙள்.

மனிதன் சுவாசிக்கும் காற்றை, மரம், செடி, கொடிகள் ஸ்வாசிப்பதில்லை, 
அவை சுவாசிக்கும்  காற்றை நாம் ஸ்வாசிப்பதில்லை.

பறந்து திரியும் பறவைகளுக்கும் ,
மனிதலால் படைக்க பெற்ற பறக்கும் வானூர்திகள்,
இன்னும் எண்ணிலடங்கா பறக்கும் பொருட்களுக்கு
ஆதாரமாய் உதவும் இக்காற்று..

மலர்களின் மேண்மைதனை பிரதிபலிக்க செய்யும்
மெய்க்காற்று.

துயில் கொண்ட போதிலும், சில்லென்று
சிலிர்க்கவைக்கும் பூங்காற்று.

கடல், நீரோட்டங்களையும். நடினமான நடனம்
ஆட செய்யும் இளங்காற்று..

கவலை கொண்டவரையும் புன்னகைக்க செய்யும், இக்குளிர்காற்று.

செங்கதிரையும், செவிசாய்த்திது ஆட செய்யும் செங்காற்று...

இறைவா உன் படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள்.
புகழ் அணைத்தும் உன்னையே சேரட்டும்....   MNA.......
« Last Edit: August 06, 2019, 01:27:51 PM by Unique Heart »