Author Topic: உனை நினைக்க மறப்பதிலும் தோற்றேன்  (Read 709 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
உன்னில் என் நினைவுகள் இல்லை
என்று  உணர்ந்த பின்,

என்னுள் உன் நினைவுகளை மறக்க,
உந்தன்  பிரிவு  வழியை தரும் என தெரிந்தும்
விலகி நின்றேன்.

உன்னை நினைக்க மறக்க,
விட்டு  விலகிய நாள் முதலே,
என்னுள் உன்மேலான நேசம் அதிகரிக்கவே  செய்தது.

என்னவளே  உன்னை மறக்க நினைத்தால்,
என்னுள் மறதி எனும் குணமே பயனளிக்காது போனதடி.

உன்னில் என் நேசத்தை உணர வைப்பதிலும் தோற்றேன்,

உன் நினைவுகளை  நினைக்க மறப்பதிலும் தோற்றேன்...

விதியின் பிடியில் சிக்கி வழியை சுமந்த இதயத்துடன்
என்றும் உனை நினைக்க மறவா உறவாளன் நான்.....  MNA...
« Last Edit: July 23, 2019, 07:02:41 PM by Unique Heart »