உறவு எனும் சுவாசம் ஒவ்வொருவரிடமும் இனைந்து பயணிக்கும் ஒன்று.
குருதியினால் இணைந்த உறவுகள் உண்மையான போதிலும்,
மன உறுதியினால் கொண்ட உறவுகள் மேன்மையானது.
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அவளையும்,
அவளின் சாயலில் கூட தெரியாத என்னையும் இணைத்து
காதல் எனும் உறவு..
கண்ட நொடி முதலே சகோதரா என்ற மந்திரத்தினால் புன்னகையுடன்
புணர்ந்தது நட்பெனும் உறவு.
நம்பிக்கையின் அடிப்படையில் என் தோழிகள் இடத்திலிருந்து பிறந்தது,
அண்ணன் என்ற உறவு.
இவ்வுலகில் உயிராய் படைக்க பட்ட அனைத்திற்கும் உணர்ச்சிகள்
இருப்பின், உணர்ச்சிகள் கொண்ட யாவும் உறவுகளை பேணுவதில்
எவ்வித கஷ்டங்களும் இல்லை.
உறவான எந்த இதயமும், உறவுகளை வேதிக்க நினைப்பதில்லை,
எனவே உறவுகளை பேணுவதை உயிர் மூச்சாய் கொள்ளுங்கள்,
உறவு எனும் கடலிலே, மகிழ்ச்சி என்னும் முத்தை அள்ளுங்கள்.
இப்படிக்கு.
என்றும் உங்களை நினைக்க மறவா உறவாளன் MNA...