பாதங்களுக்கு கீழாக
பூமி நழுவத்துவங்குகையில் நிலைகுலைகிறேன்
அழுத்தங்கள் இன்னுமாய் சறுக்கலாகி
அடி இடறும் ஒரு புள்ளியில்
புலம்பல் நிறுத்தி
புலம்பல்களின் அதிர்வுகள் தாக்கிடாதவாறு
மௌனத்தின் போர்வைக்கொண்டு
என்னை போர்த்தி
அண்டத்தில் பேரமைதியாகிறேன்
என் கூச்சல்கள் எங்கோ
ரீங்காரமிட்டு மரித்துப் போகுமாகக் கடவது