Author Topic: வலிமையுடையவை_வார்த்தைகள்  (Read 556 times)

வார்த்தைகளின் வலிமையை வார்த்தைகளாலேயே
விளக்கிவிட இயலாது.

அத்தகையவற்றைத் தெளிவான முறையில் பயன்படுத்தவில்லை
எனினும்
தீர்க்கமான முறையில் உபயோகித்தல் நன்று

எதிர்பாராமல் விழுந்த சில வார்த்தைத் துளிகளாலேயே -பலரின் வாழ்வில் வருத்த வெள்ளம் வடியாமல் வீதி வரை நனைத்துக் கொண்டிருக்கிறது.

கலங்காத நதிநீரில் நிழல் பதித்து ரசித்துக் கொண்டிருக்கிறான்
நீ வீசும் வார்த்தைக்
கல்லாயின் கலங்கிஉட்சென்றுவிடும்
காகிதமாயின் நனைந்து நாசமாகிவிடும் காற்றாயின் கலக்கிக் கடந்து போய் விடும்

இவற்றில் ஒவ்வொன்றும் வார்த்தைகளே, ஆனால் அனைத்திற்கும் கலங்கும் நீரோடையே வாழ்க்கை.

நாம் எதிர்கொள்ளும் வார்த்தைகளைக் கையாளும் விதத்தில் தான்
நாம் கலங்குகிறோமா?
கடந்து விடுகிறோமா?
என்பதைத் தீர்மானிக்க இயலும்

#வலிமையுடையவை_வார்த்தைகள்...
பிழைகளோடு ஆனவன்...