Author Topic: உயிருக்கு.உயிரான.உயிருக்காக........  (Read 662 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஒருபோதும் உயிரே தவிர்க்காதே !
ஒருபோதும் உயிரே தவிக்காதே   !

உயிருக்கு இணையாக உனையே நேசிக்கும்
உயிர்கொள்ளும் காற்றாக உனையே சுவாசிக்கும்
தொலைதூரம் இருந்தாலும் உன் அருகாமையை  யாசிக்கும்
நித்திரையில் நீ இருந்தும் உன்னை பற்றியே யோசிக்கும்

ஒருஜீவனை, உனக்கே உனக்கான சிறு ஜீவனை

ஒருபோதும் உயிரே தவிர்க்காதே !
ஒருபோதும் உயிரே தவிக்காதே   !

உயிராய், உயிர்உறவாய் ஒருநாளும் வேண்டாம்
சக ஜீவனுக்கான சம அனுசரணையும் இல்லா சிலஜீவன்களை ,
நட்சத்திரங்களாய் எண்ணி எண்ணி ரசிக்கின்றாய் ..

எத்திரைக்கொண்டும் மறைத்திட முடியாதென்பதனை
முழுதாய் முத்தரம் யோசித்துத்தான், முத்தாரமே !
நித்திரைக்குள் நீ மூழ்கி நீக்கம்பெற  நினைக்கின்றாய்
நின் நினைவிலிருந்து நீங்கமறுக்கும் என் நினைவுகளை
நட்சத்திரங்களை ரசித்தபடியே நீ இருந்தால் ரத்தினமே !
நீ அறியாதே ஓர்நாள், உன் சித்திரையது கத்தரிக்கபடலாம் !!
 
« Last Edit: January 24, 2013, 03:48:19 AM by aasaiajiith »