கார் மேகமும்
உன் கரு விழியை கண்டு
காரணம் இல்லாமல் களைந்து போகும் ....
சுட்டரிக்கும் சூரியனும்
உன் சுட்டு விழி பார்வையை கண்டு
சுருண்டு குளிர்ந்து போகும் ..
வெண் நிலவும் உன்
வெகிலி தனமுள்ள அழகை கண்டு
வெளுத்து போகும்
பறந்து திரியும் பட்டம் பூசியும்
உன் திறந்து மூடும் இமைகளை கண்டு
திசை தெரியாமல் தொலைந்தே போகும் ....
பூத்து குலுங்கும் பூக்களும்
உன் புன்னகையை கண்டு
துளி குதித்து புதைந்து போகும் ...
சுனாமியும் மௌனமாய் இருக்கும் உன்
வார்த்தைகளை கேட்டு
மெது மெதுவாய் அடங்கி போகும் ...
புல் வெளியும் உன்
நடந்து சென்ற
பாத சுவற்றை கண்டு
மண்டி இட்டு போகும் ....
உன்னை வர்ணிக்க தொடங்கினால்
வரிகள் முண்டியடித்து
முன்னே வந்து நிற்கிறது
என் வார்த்தைகளும் உன்னை
காதலிகறதே
என் காதலா..........