Author Topic: தெரியுமா இந்த குறுந்தகவல்...???  (Read 7391 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

தேநீர் என்று அழைக்கப்படும் Tea அருந்தும் பழக்கம் முதன்முதலில் சீனாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு – கி.மு.விலேயே இப்பழக்கம் தோன்றியது. சீனாவில் பால் சேர்க்காத ‘ப்ளாக் டீ’ – சர்க்கரை இல்லாது அருந்துவார்கள். பால் – ஜீனி சேர்த்து பருகும் பழக்கம் இந்தியாவில்தான் அதிகம். சீன சக்கரவர்த்தி ‘ஷன்நுங்’ என்பவர் இப்பழக்கத்தின் தந்தை. கி மு. 2337- ல் சீனாவில் டீ அறிமுகம். 1644 - ல் இங்கிலாந்தில் டீ அறிமுகம். 1800 கி,பி. முதல் உலக நாடுகளில் டீ பிரபலம் ஆனது.

கொதிப்பதற்கு வைத்த நீரில் எதிர்பாராவிதமாக விழுந்த தேயிலை... அதன்மூலம் உருவானதே இப்பழக்கம். இன்று உலகில் மாபெரும் பானமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா, இலங்கை தேயிலை உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகின்றன.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

பின்கோடு 1972 – ல் அறிமுகம். அஞ்சல் குறியீட்டில் 6 எண்கள் உண்டு. முதல் எண் மாநிலத்தைக் குறிக்கும். இரண்டாவது துணை வட்டம், முன்றாவது எண் பட்டுவாடா மாவட்டத்தையும், இறுதி மூன்று எண்கள் அஞ்சல் நிலைய எண் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

கடலில் வாழும் டால்பின் மீன்கள் அமெரிக்காவில் உள்ள கடல் ஆராய்ச்சி நிலையங்களில் உதவியாளர்களாகப் பணி செய்கின்றன. கடலுக்குள் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு கரையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் கருவிகளை எடுத்துச் சென்று கொடுக்கின்றது.

சில சமயம் கடலுக்குள் வழி தவறவிட்ட ஆராய்ச்சியாளர்களைக் கண்டு பிடித்து வழிகாட்டி அவர்கள் ஆராய்ச்சி செய்யும் இடங்களை அடைய உதவுகிறது.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

கொக்கோ மரம் 40 அடி உயரம் வரை வளரும். அதன் காய்கள் ஓரடி நீளம் இருக்கும். பலாக்காய் காய்ப்பது போன்று மரத்துடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த காய்களின் கொட்டைகளை வறுத்துத்தான் கொக்கோ பொடி செய்யப்படுகிறது. இதன் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

நோயாளிகளின் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிக்கு 'இதயத் துடிப்புமானி'(ஸ்டெதஸ்கோப்) என்று பெயர். இதனை 1819-இல் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த 'லென்னக்' எனும் விஞ்ஞானி முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு தொடக்கத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிறகு, அனைத்து நாடுகளிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டது.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

எட்டுகால் பூச்சி என்ற பெயர் கேட்டு இருப்பீர்கள். எட்டுக்கண் பூச்சி எது? அதுவும் எட்டுக்கால் பூச்சிதான். ஆம் அதற்க்கு கண்களும் எட்டு.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதருக்கு ஓசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது [highlight-text]OC[/highlight-text] என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை [highlight-text]ON COMPANY SERVICE [/highlight-text]என்ற குறித்து – கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த [highlight-text]OCS என்பதே OC என ஆகி, ஓசி ஆகிவிட்டது.[/highlight-text]
[/size][/color][/glow]

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1888
  • Total likes: 5856
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

எட்டாம் எண் சீனர்களுக்கு பிடித்தமான எண். காரணம், அதை ஓர் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர்.[highlight-text] 2003-ஆம் ஆண்டில் சீன விமான நிறுவனம் ஒன்று 88888888 [/highlight-text]எனும் தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட[highlight-text] தொகை 2,80,723 டாலர் தொகையாகும்.[/highlight-text]