Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
வலை செய்திகள்
»
சென்னை வானிலை ஆய்வு மையம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சென்னை வானிலை ஆய்வு மையம் (Read 4073 times)
regime
Hero Member
Posts: 660
Total likes: 387
Total likes: 387
Karma: +0/-0
Gender:
I Love the world ... Love you lot
சென்னை வானிலை ஆய்வு மையம்
«
on:
November 21, 2018, 11:28:12 AM »
'வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் உருவான கஜா புயல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெருமளவில் சேதம் விளைவித்துள்ளது. புயலின் தாக்கத்தில் இருந்து வெளியில் வரமுடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இருப்பினும் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறும். இதனால், அடுத்த இரண்டு தினங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பொழியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பல இடங்களில் மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே, இன்று தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பகுதிகளில் மிக அதிக மழை பொழியும் என்றும், தமிழகத்தின் வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
வலை செய்திகள்
»
சென்னை வானிலை ஆய்வு மையம்