Author Topic: ரோல் தோசை  (Read 1172 times)

Offline kanmani

ரோல் தோசை
« on: May 29, 2012, 05:00:20 PM »
 
  தோசைமாவு - ஒரு கப்
    முட்டை - 2
    உப்பு - சிறிதளவு
    கடுகு - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    அரைக்க:
    தேங்காய் - அரை மூடி
    பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
    உப்பு - சிறிதளவு
    சிவப்பு பழ மிளகாய் (அ) வரமிளகாய் - 3

 
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தேங்காய் சட்னி தயாரித்து கொள்ளவும். அதில் கடுகு தாளித்து கலந்து கொள்ளவும்

முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள சட்னி சேர்த்து கலந்து கொள்ளவும். (அளவு: ஒரு முட்டைக்கு ஒரு குழிக்கரண்டி சட்னி )

தோசை மாவை சூடான கல்லில் தோசையாக வார்க்கவும்

அதில் உடனே கலந்து வைத்துள்ள சட்னி-முட்டை கலவையை பரவலாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்

சிவந்ததும் திருப்பி போடவும்

தோசையை ரோலாக சுற்றி துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்