Author Topic: என் அன்பு தங்கை ஆஷினிக்கு!  (Read 659 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மன்றம் வந்து என் மனதை வென்ற
என் அன்பு தங்கை இவள்

அன்பாய் அண்ணா என்று அழைத்திடுவாள்
அன்பை அதில் வாரி இறைத்திடுவாள்

அழகாய் கவிதை எழுதிடுவாள்
அறிவாய் நம்மை யோசிக்க வைத்திடுவாள்

தமிழுக்கு இவள் ஒரு செல்ல குழந்தை
தரணியில் இவள் போல் உண்டோ ஒரு குழந்தை

அகர வரிசையில் இவள் பெயர் இருக்கும்
அகலாமல் என்றும் என் மனதில் அப்பெயர் நிற்கும்

முகம் தெரியா உலகத்தில் இருந்தாலும்
முன்னுரை இல்லாமல் பழகிடும்

தங்கையே
என்றும் மனம் வீச மட்டும் தெரிந்த பூக்களை போல
என்றும் ஒளி வீச மட்டும் தெரிந்த சூரியனை போல
என்றும் பிறரை மகிழ்விக்க மட்டும் தெரிந்த
குழந்தையின் சிரிப்பை போல
என்றும் மனம் விரும்பிய வாழ்க்கை பெற்று
மகிழ்வுடன் பல பல ஆண்டுகள் வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்

என் அன்பு தங்கை ஆஷினிக்கு இதயம் கனிந்த
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "