என் மனக்கண்ணாடியில் தெரிகிறான்
கண் கொட்டாமல் பார்க்கிறேன்
மாதவி மையல் கொண்ட கோவலனா ?
கோதைகள் கொஞ்சிவிளையாடும்
மீராவின் காதலனா ?
சுட்டு விழிகளில் சொட்டும் காதலில்
தோய்த்தெடுத்தேன் என் இதயம்
பட்டு மேனியில் பரந்த பார்வையால்
சற்றே சிவந்தேன் ...சிலிர்த்தும் போனேன்
கற்றை குழலும் காற்றில் தவழ அவன்
கட்டை விரலால் மெதுவாய் விலத்தி
துடிக்கும் விழிகளில் துளாவினான்
ஏவு கணைகளை மிஞ்சிய அகோரம்
ரணமாகியது பேதை இதயம்
பீறிட்டு வெளியேறின கண்ணீர்த்துளிகள்
சங்கல்பமானது அவன் விம்பம்.