Author Topic: என்னவாகின்றேன் நான்???  (Read 591 times)

Offline Jawa

கட்டில்கால் பலம் ஆராய முயன்று
கனுக்கால் தோற்ற கடைசி காலம்!
கண் விழிக்குள் கலகம் மூண்டு
கண்ணீர் அணை உடைத்து ஆண்டது!!!

என்ன நான்?? என்னை நான்
கேள்வி கேட்டேன் அந்திம நேரம்
முன்னோக்கி செல்ல முயன்று தோற்றுபோய்
பின்னோக்கி செல்லும் பித்தனின் நினைவுகள்...

மறந்து போன மழலை நிழலில்
மரத்து போகாத மதி செயல்!!
மாயவன் கதை கேட்டு மருகி
மண் தின்று மயக்கம் உற்றதும்
மக்கு பயலே மண்ணா தின்னே???
கண் சொருகும் வேலையில் கண்ணனானேன்!!!!!

கூட்டான் சோறு ஆக்க குப்பத்து
குடிசை எரியூட்டி குன்றில் மறைந்ததும்
பள்ளி மணியோசை பரப்பாதிருக்க
பேரிட்சை பழங்கள் கைமாறியதும்
பருத்தி காட்டில் திருட்டு வெள்ளரி
சுருட்டி ஓடி சுடுபட்டதும் தழும்பானேன்!!!!!


விடலை பருவம் கடலைக் காட்டிலும்
கட்டவிழ்த்து அடித்த காம அலையும்!
உதட்டுக்குமேல் உறுத்திய அரும்பு மீசையும்
ஆயுதமாகி அர்த்தம் அறியமுயன்ற சாஸ்திரமும்
கரைபுரண்ட கட்டில் நினைவில் மதனானேன்!!!!!!

கடல் க(டை)டந்து காட்டாற்றில் தள்ளியது
உள்ளம் உடைப்பெடுத்து குருதி வழிந்தோடி
உயிர் பிரவாகம் உடலுக்குள் ஊற்றெடுத்து
உச்சி வான்முகட்டில் நெட்டி தள்ளியது
ஊர்சிதம் செய்தேன் வீழ்த்தியது விண்ணிடியல்ல
வையகத்து வேல் விழியில் காதலாணேன்!!!!!!

கற்பனை கடல் கொந்தளித்து கவிதை
கடை விரித்து இலக்கியம் விற்றேன்
எதார்த்த செயலுக்கும் சாயை பூசி
எக்கு தப்பாய் எதுகை மோனை இயற்றினேன்
காதல் தேடலில் கவித்துவம் சாராம்சம்
காகிதம் நனைத்து புதுமொழி கலைஞனானேன்!!!!

அச்சு நோட்டு தேடலில் அடமானம்
வைத்த மனித நேயமும் மக்கிப்போனது!!
காரல்மார்க்சும் சேகுவேராவும் கம்யுனிசமும் கடவுளும்
கண்காணா தேசத்திற்கு நாடு கடத்தலில்
நாட்டிய கொடியில் சர்வாதிகார சமுத்திரமானேன்!!!!

பிணக்குகளில் பிறந்த உறவு நிலையில்
பாசமும் பந்தமும் பரிதவிப்பில் உறைகின்றன!
பிணியும் கலியும் பின்னி பிணைந்தன!
எட்டி தள்ளிய தனி இருக்கையும்
அள்ளி வீசிய துளி பருக்கையும்
தீண்டாமை தீயில் வெந்தபோது தனியானேன்!!!

தொண்டைக்குளிக்குள் உயிர் கீதம் முடக்கத்தில்
திரும்பி பார்க்க முயன்று திசைமாறினேன்
கல்லறை தோட்டத்தில் நினைவுகள் நிலைப்படிகையில்
நிம்மதியானேன்!! நிம்மதியானேன் !!!!

என்னவாகின்றேன் நான்??? என் கேள்வியில்
விடைகாணும் முன்னே விழி பிதுங்குதே.....