Author Topic: என் வாழ்க்கை  (Read 674 times)

Offline thamilan

என் வாழ்க்கை
« on: October 21, 2018, 01:40:52 PM »
பதின் மூன்று வயதில்
முதன் முறை ஒரு பேய் பிடித்தாட்டுவது
நதிநீரில் வலை விரித்து
விண்மீன்கள் மாட்டுவது

புதிரென்று புரிந்தாலும்
புரியாமல் நெருங்குவது
ரதி என்றும் ரம்பை என்றும்
ராப்பகலா புலம்புவது

அதிகாலை அலாரம் வைத்து
விழித்திருந்து நிறுத்துவது
மதில்சுவர் நண்பர்களை
மறைந்திருந்து கழட்டிவிடுவது

குதிரினில் நெல்லைபோல
வார்த்தைகளை நிரப்புவது
எதிரினில் பார்த்து விட்டால்
வழக்கம் போல சொதப்புவது

பதில் தெரியா கேள்வியுடன்
பல கடிதம் நீட்டுவது
முதிர்கண்ணன் ஆன பின்பும்
முதல் தழும்பைப் போற்றுவது