Author Topic: சூல்கொண்டிருந்தாளவள்  (Read 751 times)

Offline Guest

சூல்கொண்டிருந்தாளவள்
« on: September 01, 2018, 01:24:28 AM »
சூல்கொண்டிருந்தாள் அவள்
பிறசவித்தலின் வலியில்
துடித்திடல் என்பதை
கேட்டறிந்தாளவள்...

பயமுற்றமர்பவள்
மருத்துவச்சிகளில் யார்
மென்மையானவளென கேட்டறிவாளவள்
வயிற்றில் மேல் உரசிச்செல்லும்
தென்றலை கொஞ்சம்
கடிந்துகொள்வாளவள்...
.
சரிந்து படுத்துக்கொண்டவள்
மீண்டுமொருமுறை மறுப்பக்கம் சரிய
மரித்தெழுந்து மீண்டுவருதாய்
உணர்வாளவள்...
.
ஒவ்வொரு கதவிலும்
சாய்வாளவள் - மிதித்தலின்
கால்பாடுகள் வயிற்றில்
வரைந்து வியப்பாளவள்...
.
தூரத்துக்கணவனை அருகில்
அழைப்பாளவள் - துறந்த
தலையணையை முத்தமிடுவாளவள்
நினைந்து நினைந்து
உருகுவாளவள்...
.
வாசலில் வாய்ப்பாடும்
விசித்திரக்கிழவியின்
வேஷம் மறந்து சோசியம் ரசிப்பாளவள்..
முகராசிக்காரியெனும் வார்த்தையை
மீண்டும் மீண்டும் கேட்கவைத்து
சந்தோஷிப்பாளவள்....
.
உண்ணாமல் உறங்காமல்
உரக்க சப்தமிடவியலாமல்
அவஸ்த்தைகளை அமைதியாய்
நொந்துகொள்வாளவள்...
.

பிரமிப்பின் உச்சத்தை
அனுபவித்து பிறசவிப்பாளவள்
ஒரு குழந்தையாய் மாறி
மீண்டுமொரு குழந்தையை
பெற்றெடுப்பாளவள்...
.
சூல்கொண்டிருந்தாளவள்....

என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: சூல்கொண்டிருந்தாளவள்
« Reply #1 on: September 01, 2018, 12:42:47 PM »
அருமையான கவிதை

கருவுற்ற பெண்ணின் மனதை அறிந்து கவிதை வரிகளாக்கி
எழுத்திருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Guest

Re: சூல்கொண்டிருந்தாளவள்
« Reply #2 on: September 01, 2018, 04:39:57 PM »
வாழ்த்துக்கு நன்றி...சகோ...

கருவுற்ற தாயின் மனதை அறிந்தவன்....நான்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ