Author Topic: இனிய தோழனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!  (Read 1953 times)

Offline SweeTie


இனிய  தோழன்  GAB  பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!   

வாழ்த்து சொல்ல வந்தேன்  ஆனால்
வார்த்தைகள் வரவில்லை எனோ
புரண்டு புரண்டு படுத்தாலும்
தூக்கமே வராததுபோல்
சுற்றிவரும் உலகத்தில்  உன்னை வாழ்த்த
எனோ சொற்களே கிடைக்கவில்லை
கத்து கத்தாக  எழுதிய   கவிதைகளை
புரட்டி புரட்டி  எடுத்து
முத்து முத்தான வார்த்தைகளால்
முழுதாகக் கோர்த்தெடுத்து
பாடுகிறேன்  இப்பாமாலை

என்றென்றும் மார்க்கண்டேயர்
மாறாத  வயது உனக்கு 22 … 
இளவலே  நீர் வாழ்க பல்லாண்டு

தட்டு தடுமாறி  தரணியெங்கும்
தனித்து நிற்கும் இதயங்களை 
தத்தெடுத்து இணைத்துவைக்க
ftc இணையம் எனும்  பாலத்தை
கட்டிய  கட்டிட பொறியியலார்
நீர்  வாழ்க பல்லாண்டு

தேங்கிக்கிடந்த  பலர் அறிவு சுரங்கத்தை
உலகம் போற்ற வெளிக்கொணர்ந்த   
உத்தமரே நீர் வாழ்க பல்லாண்டு

பெண்களை சமமாக மதித்து 
பேரன்புடன் வழி நடத்தும்  பெருந்தகையே
நீர் வாழ்க பல்லாண்டு

துன்பத்தில்  இருப்பவனை
தூக்கிவிட்டு  வழிகாட்டும் 
கலங்கரை விளக்கே நீர் வாழ்க பல்லாண்டு

வற்றாத அறிவு கொண்டாய்
வழிநடத்தும்  ஆற்றல் கொண்டாய்
பார் புகழ் பல திறமை கொண்டாய் 
எதையும் எதிர்கொள்ளும் துணிவு கொண்டாய்
இத்தனையும் இருந்தாலும்
சற்றேனும் உன் தலை  கனக்கவில்லை
கற்றவன் முதல்  கல்லாதவன்  வரை
சற்றும்  அவன் முகம் கோணாமல்
மகிழ்ந்து உரையாடுகிறாய்   
சம உரிமை வழங்குகிறாய் 
மாற்றான் பிள்ளையென்று  வேற்றுமுகம்
காட்ட  தெரியவில்லை   
நம் சொந்தம் நம் உறவு 
நம் நண்பர்  நம்  குழந்தை
உன் உயர்ந்த பண்புக்கு நிகரேது
நூறாண்டு நீ வாழவேண்டும்

நோய் நொடி இன்றி   வாழவேண்டும்
என்றும் இன்பமாய் வாழவேண்டும்
என்றும் நண்பனாய்  அன்பனாய்
இனிதே வாழ என் நல்லாசிகள்
 
« Last Edit: June 11, 2018, 08:10:38 AM by SweeTie »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.

Offline DoRa



Offline JeGaTisH

;D ;D ;D ;D  kavithai juppppperu Jo maaa.....

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
ரொம்ப அழகான கவிதை ஜோ...

Offline SweeTie

Thank you  Icemazhai  Jega and Samyuktha

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கவிதாயிணினியின் கவிதை அருமை
கவிதைக்கு பொய்
அழகு
ஆனால்
மெய்யான இந்த கவிதைவரிகளோ
பேரழகு

வாழ்த்துக்கள் மா

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JoKe GuY

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்