Author Topic: என் அன்பு சகோதரி சம்யுக்தா !  (Read 1131 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்




அதிகம் பேசியதில்லை உன்னுடன் என்
ஆருயிர் சகோதரியே
இனிப்பாய் தித்திப்பது உன்னுடன் பேசிய நிமிடங்கள் மட்டும்
ஈ போல் மொய்க்கும் உன்னுடன் பேச பல நட்புக்கள் இங்கு
உலகத்தில் உன்னை போல் சிலர் மட்டுமே உண்டு
ஊக்கம் கொடுப்பதில் நீ எனக்கு தாய்
எப்போதும் பிறர்நலம் மட்டும் வேண்டிடும் உன் மனம்
ஏராளம் இருக்கலாம் உனக்கிங்கு நட்புக்கள் அதில்
ஐயம் இல்லை எனக்கு சிறுதுளியேனும்
ஒலி உன்குரல் ஒலி கேட்டால்  குயிலும் நாணம் கொள்ளும்
ஓர் நாள் உன்னை காண்பேன் என காத்திருக்கிறேன்
ஒளவியம் கொள்வார் ஊரார் உன் குணம் கண்டு


உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் போதாது
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247 ல் உன்னை பற்றி சொன்னால் தீராது
சகோதரிக்கு அண்ணனின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

****ஜோக்கர் ****
« Last Edit: June 15, 2018, 11:30:53 AM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
மிக்க மிக்க நன்றி ஜோக்கர் னா... உங்களுடைய எழுத்துக்களுக்கு நான் உகந்தவளா என தெரியவில்லை... தங்களிடம் சரிவர பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ளாததற்கு மன்னிக்கவும்..

பிரதிபலன் பாராது அன்பு செலுத்தும் உறவுகளையும் நட்புகளையும் இங்கு காண செய்த கடவுளுக்கு நன்றி