« on: June 11, 2018, 10:55:05 PM »
கோடைக்காலத்தில் உடலை குளுமையாக வைத்துக் கொள்வதற்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் வெள்ளரிக்காய். மேலும் இந்த வெள்ளரிக்காய் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியது. இத்தகைய வெள்ளரிக்காயானது பல்வேறு சாலட்டுகளில் பயன்படுத்தப்பட்டாலும், இதில் நிறைந்துள்ள நன்மைகள் அதிகம்.
எப்படி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால், நீரிழிவு நோயானது கட்டுப்பாட்டுடன் இருக்குமோ, எப்படி பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இரும்புச்சத்து அதிகரிக்குமோ, அதேப் போல் வெள்ளரிக்காய் ஜூஸை காலையில் குடித்து வந்தால், நாள் முழுவமும் உடலானது மிகவும் எனர்ஜியுடன் இருக்கும்
பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக்கூடியவை.
இப்போது வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
« Last Edit: June 11, 2018, 11:49:33 PM by DoRa »

Logged