Author Topic: மரணம்  (Read 752 times)

Offline Guest

மரணம்
« on: March 18, 2018, 01:23:05 PM »
எல்லா மரண வீடுகளிலும் என் மனம்
என் மரணத்திற்காக அழுகின்றது

தான் மரணித்த பின் தனக்காக அழ முடியாத்
துயரம் அதுக்கு, பாவம்

வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி
அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி
வேவு பார்க்கிறது கள்ள மனசு

ஒவ்வொரு மரண வீடும் தனக்கான
ஒரு ஒத்திகை பார்க்கும்
இடம் என்று சொல்லுது மனம்

எல்லாச் மரண செய்திகளின் போதும்
எல்லா மரணம் பற்றிய
தகவல்களின் போதும் விக்கித்து
தன் மரணத்தை நினைத்து ஒரு கணம்
தடுமாறுகிறது

எல்லா வீதி விபத்துகளும்
என்னை அச்சுறுத்துவன போன்றுதான்
எல்லாச் மரணங்களும் என்னை அச்சுறுத்துகின்றன

மரணித்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில்
பல எனக்காக அழுவன என கண்கள் சொல்வதில்லை

மரணம் பற்றிய செய்திக் குறிப்புகளில்
என் மரணம் பற்றிய தேடல்களின் செல்கின்றது
மனம்.......
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ