Author Topic: ரத்தக் கொதிப்பு:  (Read 808 times)

Offline DoRa

ரத்தக் கொதிப்பு:
« on: March 04, 2018, 03:08:37 PM »
ரத்தக் கொதிப்பு:

நாம் அதிகமாக வருத்தப்படும்போதும், துக்கப்படும்போதும், கோபப்படும்போதும், ஆத்திரப்படும்போதும், ரத்த நாளங்கள் சூடேறி வழக்கத்துக்கு மாறாகக் கொந்தளிக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு தருணங்களிலும், , மாதவிலக்கு நிரந்தரமாக நிற்கும் காலத்திலும், , கர்ப்ப காலங்களிலும், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடும் நேரங்களிலும், அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத்தான் ‘ ரத்தக் கொதிப்பு’ என்கிறோம். இவர்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கொழுப்புச் சத்து உள்ளவற்றைக் குறைக்கவும். கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் கலந்த பொருள்களை உபயோகிக்கக்கூடாது. அதற்குப் பதிலக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் பதார்த்தங்கள் நலம். கொழுப்பு நீக்கப்பட்ட பால், தினமும் இரு வேளை, தலா 1 டம்ளர் குடிக்கலாம். வெண்ணெய் எடுக்கப்பட்ட மோரை மதிய உணவில் சேர்க்கலாம். வாரம் இருமுறை முட்டையின் மஞ்சள் கரு(வெள்ளைக் கரு வேண்டாம்) சாப்பிட்டால், இதயத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அசைவப் பிரியர்கள் கொழுப்பு ( தோல் ) நீக்கிய மீன் சாப்பிடலம். உருளை, பீன்ஸ் வேண்டாம். காஃபி , டீக்குப் பதிலாக வெண்ணெய் நீக்கப்பட்ட பால் பருகலாம். நெய், வெண்ணெய், டாடா, கேக், ஐஸ் கிரீம், பிஸ்கட், தேங்காய்ப் பண்டங்கள், வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், பொறிக்கப்பட்ட , வறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளை சாப்பிடக்கூடாது                         

மிரட்டும் மார்பகப் புற்று:
மிக இளம் வயதிலேயே பூப்பெய்தும் பெண்களுக்கு , பின் நாட்களில் மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். ‘ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள்’ வெளியேறிவிடுவதே இதற்குக் காரணம். குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடும் பெண்களும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகின்றனர். சமீப காலமாக இளம் பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதும், அச்சமடையச் செய்துள்ளது.