Author Topic: காகங்களும் நம்பிக்கைகளும்...  (Read 8 times)

Offline MysteRy


மனிதர்கள் வாழும் பகுதிகளில் விதைபரவுதலில் முக்கிய பணியைச் செய்பவை காகங்களே. அதோடு கழிவுகள் என நாம் தூக்கிப் போடுபவற்றை தின்று சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துபவையும் காகங்களே. காகங்கள் மட்டும் இல்லையெனில் நாம் விரும்பி ரசிக்கிற குயில் சத்தத்தையே கேட்க முடியாது. காகங்களின் கூடுகளில்தான் குயில்கள் பிறக்கின்றன...

-----×------

விசம்வைத்து கொல்லப்பட்ட எலிகளை தூக்கிப் போடுவதற்கு முன்னர் இனி ஒரேஒரு நிமிடம் மட்டும் யோசித்து செயல்படுங்கள்,
"அந்த செத்த எலி சூழலிற்கு உதவுகிற ஒரு காக்கையையோ ஒரு ஆந்தையையோ பாதிக்கலாம் அல்லது கொல்லப்படலாம்"....

காகங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் நமக்கருகே வசிக்கும் ஒருவகையான காகம்தான் இந்த,
வீட்டுக்காகம்...
மணிக்காக்கை...
நல்ல காக்கா...
ஊர்க்காகம்...
(House Crow) எனப்படுவது.
காட்டுக்காகமாக இருந்த பறவையின் வாழ்வியலில் நீண்டகால மனிதக் குறுக்கீடால் இந்தவகைமட்டும் மனிதர்கள் வாழும் பகுதிக்கேற்ப தம்மை மாற்றியமைத்து வாழ்கிறது. உடல் முழுவதும் கருப்பாக உள்ள அண்டங்காக்கைகள் காடுகளில் வாழ்பவை அவ்வப்போது கிரமப்பகுதிகளிலும் காணலாம்....
இந்த வீட்டுக்காகம் ஒரு அனைத்துண்ணி எது கிடைத்தாலும் ஒரு கை பார்க்கும். சுமார் அறுநூறு வகையான உணவுகள் இதன் பட்டியலில் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். திடீரென ஒரு புதிய உணவை பார்த்துவிட்டால் கத்தி மற்ற காகங்களை வரவழைத்து உண்ணும் இந்தப் பழக்கத்தை கூடி வாழ்தலின் குறியீடாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை,
"இது காகங்களின் முன்னெச்சரிக்கை குணம்" என்பதை சமீபத்திய ஆய்வுகள் சொல்கிறது. அதாவது மற்ற காகங்களையும் வரவழைத்து அவற்றில் எதையவது ஒன்றை, உணவினை முதலில் தின்ன அருகில் செல்லவைக்கும் யுக்தி என்கிறார்கள். வந்த காகங்களில் எதாவது ஒன்று உணவினருகில் செல்லும்போதோ அல்லது உணவினைத் தின்னும்போதோ எந்த ஆபத்தும் ஏற்படாவிட்டால் மட்டுமே நம்ம காகம் சாப்பிட ஆரம்பிக்குமாம்...
இப்படி பறவைகளில் மிகுந்த சமயோசித புத்தியுள்ளது காகம் என்பதற்கு மேற்கண்ட ஆய்வே சான்று. அதற்கும் காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். சிம்பன்சி மூளைக்குப் மனிதர்களது மூளைக்கும் வெகு அருகிலான அமைப்பு காகங்களுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்...

நீண்ட நெடும் காலமாக மனிதர்களோடு இணைந்தே வாழ்வதால். மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உணவினை அடைகிற முயற்சிக்காகவும், இவைகளிடம் இப்பண்பு மேலோங்கி இருக்கலாம்...
மனிதர்களுக்கு அருகினில் மனிதர்களோடு சேர்ந்து வசிப்பதினாலேயோ என்னவோ காக்கைகளை மனிதர்கள் வாழ்வோடு பிணைத்து பலவிதமான மூட நம்பிக்கைகளோடு, காக்கைகளை தின்றால் கக்குவான் இருமல்வரை குணமாகும் என்கிற எதற்கும் பொருந்தாத நம்பிக்கைகளும் ஆழப்புதைந்து கிடக்கிறது....

கேள்விகள் கேட்டால் தெய்வக்குற்றம் என கற்பிக்கப்பட்ட மனித சமூகத்தில் வாழ்கிறோம். அதனாலேயே கண்மூடித்தனமாக காரண அறிவை விலக்கி வைத்து அனைத்தையும் பின்பற்றுகிறோம்...
பறவைகள் மட்டும் ஒருநாள் இல்லையெனில் பூச்சிகளால் நாம் கொல்லப்படுவோம் என்கிறார்கள்....
காக்கைகளுக்கு உணவளிப்பதால் என்ன நடக்கும். மனிதர்களுக்கு ஒன்றும் நடக்காது. அது உங்களது விருப்பத்தை பொருத்தது. ஆனால் ஒருசிலரை மாதிரி முன்னோர்களுக்கு உணவளிக்கிறேன் என்கிற நம்பிக்கையில் காக்கைகளுக்கு உணவளிப்பதைவிட, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அன்போடு உணவளிப்பதே சிறப்பு. அல்லது உயிருள்ள ஏதுமற்ற மனிதர்களுக்கு செய்வோம். காரண அறிவின் துணைகொண்டு அனைத்தையும் அனுகுவோம். பல்லுயிரியம் போற்றுவோம்...