Author Topic: இஸ்ரேலிய பொருட்களை தவிர்க்க முடியுமா?  (Read 2107 times)

Offline MysteRy

இஸ்ரேலிய பொருட்களை தவிர்க்க முடியுமா?

69 வருடங்களில் மனித வாழ்வின் அதி முக்கிய தளங்களில் விஞ்ஞான வளர்ச்சியை மைய்யமாக வைத்து இஸ்ரேல் செய்துள்ள புரட்சி என்பது மறுக்க முடியாதது.மறைக்க முடியாதது.சில அமைப்புகள் சில இஸ்ரேலிய மீடியாக்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று பத்ஃவா விட்ட பழைய கதைகள் இணைய வரலாற்றில் இன்றும் நம்மை நகைக்கவைப்பவையாக இருக்கிறது. குறிப்பாக YOUTUBE இணையதளத்தை சொல்லலாம்.இந்த வீடியோ இணையத்தை விட்டு வெளியேறி விடவேண்டும் ஆவேசமாக பயான் செய்தவர்கள் தங்கள் வீடியோக்களை வேற்று வழியில் செல்லுபடியாக்க முடியாமல் அதிகாரபூர்வமற்ற பெயர்களில் youtube பிடம் மீண்டும் சரணடைதிருக்கிறார்கள் என்பதை நாம் கண்முன் கண்டுகொண்டிருக்கிறோம்.
இஸ்ரேலின் பொருட்களை தவிர்த்துவிடவேண்டும் என்ற பத்ஃவாக்கள் எல்லாம் எந்த பயனையும் தரப்போவது இல்லை என்பதை இந்த வீடியோ நமக்கு புரியவைக்கும்.இந்த கட்டுரை பார்த்தவுடன் நாம் இஸ்ரேலிய ஆதரவாளன்,யூத கைக்கூலி போன்ற ரெடிமேட் வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.உண்மை எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும் .நாம் எந்த ஆதரவனும் இல்லை உண்மையின் பக்கமே!


.