என் தோழிக்கு ஒரு கவிதை ...

அன்பும் பண்பும்
அகத்திலே நிறைத்து
தந்தைக்கே தாயாய் நிறைந்த
என் அன்பு தோழியவள் ...
கல கல என்ற பேச்சும்
கண் கவரும் துடிதாட்டமும்
கண்களில் குறும்பும்
கனிவும் விஞ்ச
பல கலர் கலர்
கனவுகளை காணும் இவள் விளிகளுகுள்ளும்
விடை காண முடியாத சோகம் இழையோடும் ...
பெண்ணாய் பிறந்தாலே சில
பல சோகங்களும் சொந்தமாகுமோ ....
என் தோழிக்காக என் போல பல இதயம் துடித்தாலும்
அவளுக்குள்ளும் ஓர் இதயம்
அடிக்கடி வெளிவர துடித்து தவித்தது ...
காலமும் கனியவில்லை ...
அவள் காதலும் கலையவில்லை
இரு இதயத்தின் இமாலய தவம்
இறைவனின் பார்வையில் சிக்கியதோ
அன்றி இனியும் இவள் வாழ்வில்
வசந்தத்தை பறிக்க மனமின்றி
வரங்களை கொடுக்க நினைத்தானோ
இதயங்களின் சங்கமம்
இனிதே நடகின்றது ..
இணையபோகும் இதயங்களுக்கு
என் இதயம் கனிந்த
வாழ்த்துக்கள் தோழியே ..
கவலைகளை சுமந்த உனக்கு
கனவுகளை பரிசளித்த இறைவனுக்கும் நன்றிகள்
இருதயத்தின் ஓர் ஓரத்தில்
கவலைகளை சுமந்தாலும்
என் இதயம் உனக்கு
தாயாய் தந்தயாய் சகோதரியாய்
நல்லதொரு தோழியாய்
மகிழ்ச்சியில் விம்மி தணியும் ...
உன் மகிழ்வான வாழ்வுக்கு
என் மனமார வாழ்த்துகள் தோழியே ...
என்றும் இணை பிரியாத
அன்றில்களாய் இணைந்து
உயர உயர பறந்திடு ...