Author Topic: நிம்மதி கண்டு ...  (Read 469 times)

Offline சாக்ரடீஸ்

நிம்மதி கண்டு ...
« on: January 18, 2018, 09:38:28 PM »
நிரந்தரம் இல்லா உலகில் ...
நீயும் நானும் நிரந்தரம் ஆக ...
புதியதோர் உலகம் படைப்போம் ...
நமக்காய் நாம் வாழ்வோம் ...
துன்பத்தை தொலைத்து ...
இன்பத்தை பெருக்கி ...
பிரிவை கொன்று ...
நேசத்தை பன்மடங்காக்கி ...
ஆதவனுக்கு விடுமறை அளித்து ...
சந்திரனை நிரதரமாக்கி ...
பனி பொழியும் இரவில் ...
என்னோடு நீயும்
உன்னோடு நானும் ...
ஒருவர் மடியில் இன்னொருவர்
நிம்மதி கண்டு ...
கூடி கலந்து வாழ்த்திடுவோம்
ஆண்டுகள் கோடி ...