நிலவின் கூட வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடு வாழ வரம் தா.
பூக்கள் பூக்கிறது சூரியனை பார்த்தா
அல்ல உன் பூரித்த முகம் பார்த்து.
செவ்வானம் கூட சிவக்கிறது
உன் சிவந்த இதழ் பார்த்து.
மஞ்சள் பூசிய மனமகளே
உன் மனதிற்குள் இடம் தருவாயா.
பெண் என்று பெயர்வைத்து
பூ ஓன்று உலா வருகிறது...
பூவை பரித்தால் மட்டுமா வாடும்
அல்ல அது மரத்தில் இறுந்தால் கூட வாடும்.
அது போல உன் முகம் வாடினாலும்
என் அகம் வாடும் என்பதை மறவாதே..
எழுதும் பேனாவின் வலி
சிந்தும் மைக்கே புரியும்.
வாசிப்பவனுக்கு வரிகள் தான் புரியும்
வலிகளை புரிந்தால் அவன்
வார்த்தைகளை தொடுக்க மாட்டான்.
நீங்கள் வாசித்து பிடிக்காவிட்டலும் ...
வரிகளை தொடுத்தவன் மனதை வாட்டதீர்கள்....
அன்புடன் ஜெகதீஸ்....