உனக்காக காத்திருக்கும் தருணத்தில்
நொடிகள் கூட யுகமாகிறது
உன்னை பற்றிய நினைவுகளை அசை போட
ஆரம்பித்ததும் நொடிகள் கரைந்தே போகிறது
வழி மேல் விழி வைத்து காத்திருப்பார்களாம்
நானோ என் விழியை வழியாக்கி
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
சூரியனை கண்ட தாமரை போல
உன்னை கண்ட உடன் முகம் மலர காத்திருக்கிறேன்
என்னவனே என் ஏக்கம் தீர்க்க வருவாயா?
இல்லை நேரம் தாழ்த்தி
என்னை ஏக்கத்தில் தவிக்க விடுவாயா