உன் வார்த்தைகளுக்கு தான் எத்துனை வீரியமடி !
உன் வார்த்தைகளுக்கு தான் எத்துனை வலிமையடி !
விண்ணை விட , மண்ணை விட, பொன்னைவிட ,
பெண்ணை விட , ஏன் என்னை விட
மிக மிக உயர்வாய் நான் மதிப்பது என் மனசாட்சியை.
அம்மனசாட்சியின் மான்மைக்கு மேன்மையாய்
ஒரு உதாரணம், சிறு உதாரணம்
"வழக்கமாக ஒற்றுழையாமை புரியும்
மனதும் ,அறிவும் மனசாட்சியின் உத்தரவை ஏற்று
மாலை காற்றிற்கு தலையாட்டும் வாச முல்லையை போல்
தாயின் அரவணைப்பில் தோல் சாயும் பிள்ளையை போல்
ஜோசியனின் சொல்கேட்டு சீட்டெடுக்கும் பச்சை கிள்ளையை போல்
ஒன்றிற்கு ஒன்றாய் ஒற்றுபோகும் ஒற்றுமையாய்
அப்பெரும் புகழுக்குரிய மனசாட்சியே என்னிடம்
கெஞ்சியும், கொஞ்சியும் ,மிஞ்சியும் மட்டுமல்ல
மன்றாடி ,மடியேந்தி ,இறுதியில் மண்டியிட்டும்
ஏற்காத மனமும் ,அறிவும்
மனதை பறித்தவள் ,மனதில் நிறைந்தவள்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவள்
நீ ஒற்றை வார்த்தை சொன்னதும்
மும்மூர்த்திகளும் ( மனது,அறிவு,மனசாட்சி)
ஒன்று சேர ஒத்துபோனதே !
உன் வார்த்தைகளுக்கு தான் எத்துனை வீரியமடி !
உன் வார்த்தைகளுக்கு தான் எத்துனை வலிமையடி !