Author Topic: ~ பிரெட் மெதுவடை ~  (Read 365 times)

Offline MysteRy

~ பிரெட் மெதுவடை ~
« on: July 04, 2017, 11:32:21 PM »
பிரெட் மெதுவடை



பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) – 5
ரவை – 3 டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் பிரெட் மெதுவடை ரெடி!!!