Author Topic: ~ வேர்க்கடலை குழம்பு ~  (Read 433 times)

Offline MysteRy

~ வேர்க்கடலை குழம்பு ~
« on: July 04, 2017, 11:27:54 PM »
வேர்க்கடலை குழம்பு



தேவையான பொருட்கள் :

பச்சை வேர்க்கடலை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி சாறு – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.

* அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

* சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.