ஐரோப்பிய தனிமையும் சீரழிவும்.....    தொடர் 01 
வீட்டில் இருந்து வெகுதொலைவில் எனது வேலை 
தமிழர் யாருமில்லா துயரமங்கே..... ஐரோப்பாவின் மூலையொன்றில்
தனியாக வாழ்க்கை..... துயரம் அதிகம் 
திடீரென ஒருநாள் தேவைதையாய் 
ஓர் தமிழச்சி எதிர்ப்பட்டாள்.....
பார்க்கும் போது இதயமதில் ஏன் பற்றிக்கொண்டே இருக்கிறது 
அணைக்க தோண்றுகிறது முடியவில்லை.....  
அவளுக்கும் எனைப்போல் தோண்றுமோ.... 
ஆனால் அப்படி தெரியவில்லை அவள் செய்கையில் பார்வையில் 
காண்கையில் ஓர் இதழ் அவிழா பெரும் சிரிப்பு.....  
அசையாத வதனம்... பணியும் ஓர் வணக்கம்..... 
எரிகிறது தீ அணைக்க விரும்புகின்றேன் முடியவில்லை 
ஏக்கம் அன்பா... 
ஏக்கம் இச்சையா...  
இல்லை தமிழச்சி என்பதா ஏக்கம்..... 
பேச சமையம் வாய்ப்பதில்லை... 
வாய்த்தலாலும் தயக்கம் விடுவதில்லை... ஆனாலும் 
பற்றி எரிகிறது அணைக்க விரும்புகின்றேன் முடியவில்லை.... 
வழக்கமாக காணும் வதனம் கண்படவில்லை..... சிலதினம்...  
தயக்கம் கலைத்து துணிவுகொண்டு
இல்லம் சொன்று கதவை தட்டுகின்றேன்..... 
சில நிமிடங்கள் கடந்து கதவு திறந்தது...
வாடிய வதனம் நீங்கிய கதவால் எட்டிப்பார்க்க.....
மனது கலங்க... படபடப்பு விலக... உள்ளேவரலாமா என்றேன்..... 
கதவுகள்!+ அகலத்திறந்தது..... தீ ஏதும் எரியவில்லை..... 
அணைக்கவும் தோண்றவில்லை.....  
கலக்கம் மட்டும் இதயம் கொள்ளா அளவு!....
இருக்கும் இடம் அழகாய் இல்லை... அவள்போல்...
ஆனால் சுத்தம்... அவள்போல் இருந்தது..... 
மருத்துவரிடம் போகலாம் என்றேன்.....  
சிரமம் வேண்டாமே என்றாள்... உடலுக்கு மருந்து தேவை. 
மருத்துவரிடம் அழைத்துப் போனேன்..... 
அங்கே அனுமதியும் சுலபம் எனக்கு 
சலுகைகளை தவறாக கைக்கொள்ளாது 
அலைபேசியில் அனுமதி பெற்றுவிட்டேன்..... மருத்துவ தோழியிடம்..... 
 
மறைக்க எதுவும் இல்லை மருத்துவரிடம்...  
உடல் நலம் குன்றி 7 ஏழு நாள் 
கடைசி 4 நான்கு நாள் உக்கிரமானது..... 
ஏன் உடனே மருத்துவரை நாடவில்லை..... 
இப்படி அவதானம் கொள்ள மறுப்பது உடல் நலத்தை சீர் கெடுக்கும்..... 
பெண்களின் உடல் மிக கவனமாக காக்கப்பட வேண்டும்..... 
கல்வியிலும் அறிவியலிலும் மேன்மை எய்திய பெண் மௌனமாகவே.....   
கடமையை செய்த மருத்துவர் எச்சரிக்கையும் செய்கிறார்..... 
சுகத்துக்கு மட்டுமே? துணை.....  வேதனையில் இல்லையா....?  என்கிறார் 
மீண்டும் நிகழாமல் பார்க்கின்றேன் என்றேன்.....  
நிகழ்ந்தால் காப்பது கடினம்.... கவனமாக இருங்கள் என்றவர்... 
மருந்தை சரியாக எடுங்கள்... சரியாகவில்லை என்றால்... 
உனடே மருத்துவ மனைக்கு செல்லுங்கள்..... 
என்னையும் எப்போதும் அழைக்கலாம்..... கடிதமும் தந்தார்..... 
அவள் மறுத்ததால் தானே மருத்துவமனை செல்லவில்லை 
உடல் நிலை சரியாகிவிட்டால் கடவுள் அருள்..... 
இல்லையேல் மருத்துவமனைக்கு செல்லலாம்..... 
அழைத்து போனது போலவே கைத்தங்கலாக... பிடித்து வருகிறேன்...  
சிற்றுந்தில் ஏறியதும் வேலைக்கு விடுமுறை அறிவித்தேன்.....  
இப்போது அவள் பெயர் தெரிந்தது வர்த்தினியென.....  
வர்த்தினியை கேட்கின்றேன்..... உங்கள் அறையில் ஏதேனும் 
அவசியமான அவசரமானவை எதையும் எடுக்க வேண்டுமாவென.... 
கூர்மையான ஒரு பார்வை.... பலபல அர்த்தமும் 
கேள்வியும் உதிர்த்த பார்வை..... ஆனாலும் 
என் கையில் அணைத்தபடியே அணைத்து சென்றேன்.....  
எதர்க்கும் தயக்கமில்லை... பதட்டம் படபடப்பு இல்லை... 
வக்கீரம் இல்லை... தீயும்  பற்றி எரியவில்லை..... 
ஆகவே தோண்றியது போல் அணைக்கவும் தோணவில்லை..... 
புள்ளிமானாய் துள்ளியவள்..... வாடிய மலராய்..... 
காமுகன் என் கைகளின் தோள்களின் கருணை வேண்டுகிறாள்..... 
 
என் மனது... தன்னையே தான் உயர்வென சொல்லிக்கொள்கிறது..... 
மனதெல்லாம் அழுகிறது..... பெண்கள் உடலில் இத்தனை மாறுதலா... 
நேற்றுக்கும் இன்றுக்கும்..... 
திங்கள் முதல் ஞாயிறுக்கு நடுவே இத்தனை அலங்கோலமா.....!? 
வலிகளின் பிரவாகம் புயல் ஈயும் மழைபோல் உள்ளத்தை அலைக்கிறது..... 
மறுபடியும் கேட்டேன் வர்த்தினி உங்கள் அறையில்...  ஏதேனும் 
அவசியமான அவசரமானவை எடுக்க வேண்டுமா..... வென 
கூர்மையான ஒரு பார்வை..... 
பலபல அர்த்தமும் கேள்வியும் உதிர்த்த 
அதே பார்வை..... மனதை வருடும் மௌனம்..... 
உங்கள் பார்வை புரிகிறது..... ஆனால் 
வேறு வழியில்லை..... என்வீட்டில் நீங்கள்..... 
இல்லையேல் உங்கள் அறையில்... உங்களுடன் நான்.....  
இரண்டில் ஒன்றுதான்.  
எது உங்களுக்கு வசதி என்றேன்..... 
மௌனித்தாள்..... 
இதில் மருத்துவர் வேறு விபரீத சாட்ச்சி இருவர் நடுவேயும்..... 
அவளது அறைக்கு சென்றோம்..... 
தேவையானதை தயங்கி தயங்கி பொட்டளமிட்டாள்... 
உடலில் உசுப்பு இல்லை..... 
அவள் தேவையென அடுக்க முயல்வதெல்லாம்..... 
எடுத்து வைக்கின்றேன்..... 
அனைத்தும் எடுத்த பின்னர்... 
நான் இங்கே இருந்து விடுகின்றேன்... 
செய்த உதவி போதுமென்றாள்..... 
பெண்ணின் இயலாமையிலும்... இல்லாமையிலும்... கூட.  
பெண்மையின் குணங்கள் தயங்குவதுதனே சிறப்பு..... 
ஒஞ்சுகிறாள் கூடவர..... 
எதுவாயினும்..... 
தனியே இருப்பது ஆபத்து..... 
படுக்கையில் விழவும் உதவி தேவை.....  
எப்படி விலகிச் செல்வது... 
மனது அனுமதிக்கவில்லை..... 
சில உண்மைகளை சொல்லிவிடலாம்... 
அப்போது அவளது பெண்மை என்னை நம்பலாமென......
உணர்ந்து என் உள்ளத்தை சொன்னேன்..... 
உங்களை கண்ட போதெல்லாம் எண்ணமதில் 
ஏக்கம்... இச்சை... படபடப்பு... ஆசைகள்... 
பூகம்பமாய் புலர்ந்தது உண்மை..... 
இப்போது உன்னை..... 
என்னைத்... தன் கருவறையில் சுமந்தவள் போல்..... 
அழவேண்டாம்..... அழுவதர்க்காக சொல்லவில்லை..... 
பிறந்த குலத்தின் மேன்மை காக்க நான் பெற்ற பேறு..... 
நினைவால் கூட உங்களை இச்சியேன் நம்புங்கள்..... 
கடந்துபோன எனது ஐரோப்பிய வாழ்க்கை மிகமிக 
அழிவானது... இழிவானது... 
தவறுகளை மனசாட்ச்சி சொன்னாலும் ஏற்றதில்லை... 
மனச்சான்றின் முன் துரோகி..... 
உங்களுக்கு உத்தரவாதம் உண்டு.....  
நீண்ட வற்புறுத்தல்..... சிந்தனை... ஆலோசனைக்கு பின்னர் 
அவசியமென சேர்த்ததை எடுத்து சிற்றுந்தில் வைத்தேன்..... 
பின்னர் அவளையும் பிடித்து அணைத்து வந்தேன்.....  
எதுவும் பற்றி எரியவில்லை..... 
அணைக்கவும் தோணவில்லை..... 
உடலில் எங்குமே  சுடவில்லை..... 
எப்படி...? இப்படி மாறியது...? 
என் மெய்யும் மனமும்.....  எனக்கே ஆச்சரியம்... ...
எயிட்ஸ் எனக்கு உறவாக வேண்டும்..... 
எத்தனை நூறு பெண்கள்..... 
எத்தனை தேசத்தவர்.....  
தனிமையான இரவுகளே இல்லாத மன்மதன்..... ஆனால் 
என்னையே என்னால் நம்ப முடியவில்லை..... 
நிகழ்ந்து கொண்டு இருப்பது உண்மை..... 
எதுவும் பற்றி எரியவில்லை..... 
அணைக்கவும் தோணவில்லை..... 
உடலில் எங்குமே  சுடவில்லை..... 
எப்படி...? இப்படி மாறியது...? 
என் மெய்யும் மனமும்.....  எனக்கே ஆச்சரியம்... ... 
என்னாலும் நீதிக்கு முரணான சிற்றின்பத்தை ஒதுக்க முடியும்..... 
என்னையே என்னால் நம்ப முடியவில்லை இருந்தாலும் உண்மை..... 
நானே என்னை எண்ணி பெருமிதம் கொள்ளமுடிகிறது.....  
குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே