Author Topic: காதலுக்கு மரியாதை  (Read 457 times)

Offline thamilan

காதலுக்கு மரியாதை
« on: February 19, 2017, 10:36:23 AM »
உன்
ஓரக்கண் பார்வையிலே
ஒருநூறு பூக்கள் பூக்குமே
உன்
உதட்டோர சிரிப்பினில்
ஓராயிரம் முத்துக்கள் சிதறுமே
உன்
குலுங்கும் நடை கண்டு
பலநூறு இதயங்கள் சிதறுமே
உன்
கொஞ்சு மொழி கேட்டு
அகிலமும் சொக்குமே ........

உலகம் தன்னைத்தானே
சுற்றிவருவது போல
என்னை நானே சுற்றி வருகிறேன்
என்னையல்ல உன்னை
நான் என்றால் அது
நீ தானே ......

சூரிய ஒளி பட்டு
சந்திரன் பிரகாசிப்பது போல
உன் பார்வை பட்ட பிறகே
நானும் பிரகாசிக்கிறேன்........

நீ ஒரு எழுத்து
நான் இரு எழுத்து
காதல் மூன்றெழுத்து
இன்பம் நான்கெழுத்து
நாம் ஒன்று சேர்ந்தால்
குடும்பம்  ஐந்தெழுத்து .......