Author Topic: நாகரிகத்தின் கோலம்  (Read 533 times)

Offline thamilan

நாகரிகத்தின் கோலம்
« on: December 23, 2016, 09:08:24 PM »
இன்றய இளைஞர்கள்
நாளைய இந்நாட்டு மன்னர்கள்
மலையோ பனியோ
முட்டி மோதி தகிர்த்திட துடிக்கும்
இள ரத்தங்கள்......
நஞ்சோ அமிர்தமோ
பருகிப் பார்த்திட துடிக்கும்
இளம் பருவத்தினர்......

ஆக்கமும் ஊக்கமும் கொண்ட
இளம் பருவத்தினர்
அழிவுப் பாதையில் போவதும் ஏன்!?
நாகரிக மோகத்தால்......
நகர வாழ்வின் மாற்றத்தால்......
திசைமாறிப் போவதும் ஏன்!?

பாரதி கண்ட புதுமை பெண்கள் அல்லவா
பெண்கள்!!!
ஆணுக்கு நிகர் பெண்கள் - அதை
அறிவதனில் காட்டமறந்தது
பார்களிலும் டிஸ்கொதேகளிலும்
ஆணுக்கு நிகர் நாங்கள் என
ஆடித் திரியும்
புதுமைப் பெண்கள் இவர்கள்!!!!!!

குத்துவிளக்காய் சுடர்விட வேண்டிய
பெண்கள் இன்று
கொலுவிளக்காய்!!!!!!
நாகரிகத்தின் கோலமல்லவா இது!!!!!

பெற்றோர் சித்திய
வியர்வை துளிகள்
இன்றய இளைஞர்கள் கைகளில்
மதுக்கோப்பைகளில் நிரம்பி வழியும்
மதுக்களாக!!!!!
இவர்கள் இந்நாட்டு குடிமக்கள் அல்லவா.......

நாகரிகம் மண்ணுக்கு பூசும்
கண்மை  போல......
அளவோடு  இருந்தால் அழகாக இருக்கும்
அளவுக்கு மீறினால் அவலட்சணமாகிவிடும்
இன்றய உலகம் இளைஞர்கள் கைகளில்!!!!!

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: நாகரிகத்தின் கோலம்
« Reply #1 on: December 23, 2016, 11:26:40 PM »
வணக்கம் தமிழ். உண்மை தோழா. நாகரிகத்தில் மூழ்கி அழிந்து போனதுண்டு பலர். ஆணுக்கு சரிசமமாய் பொதி போதும் பெண் இனம். தேவையில்லா வழிகளில் பொய் நாசமாவதை ஒவ்வோர் நொடிகளில் காணலாம். வாழ்த்துக்கள் தமிழன். உண்மைகளை உங்கள் கவி மூலம் படைத்துள்ளீர்.பல கவிகளை எதிர்ப்பார்க்கிறேன்.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: நாகரிகத்தின் கோலம்
« Reply #2 on: December 29, 2016, 04:32:50 PM »
ஐயா தமிழ், வணக்கம்!

உண்மையான கருத்து
ஆணும் பெண்ணும்
உள்ளத்தில் எண்ணத்தில்
சமமாகிவிடலாம்
உழைப்பால் கூட ஆகலாம்

இயல்பில் பெண் பெண்ணே!
அழுதாலும் பிள்ளையை
அவளே பெறுவாள்!
விதிவிலக்குகள் விதியாகாது
கல்வியிலும் அறிவியலிலும்
பெண்கள் உலகில் உயர்ந்தனர்!

நாகரிகம் கண்ணுக்கு பூசும்
அஞ்ஞனம்  போல......
அளவோடு  இருந்தால்
அழகாக இருக்கும்
அளவுக்கு மீறினால் !?

உண்மையை உணர்ந்து உணர்த்தினீர்கள்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி
« Last Edit: December 29, 2016, 08:33:25 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....