Author Topic: ~ அன்னாசி பாயசம் ~  (Read 367 times)

Offline MysteRy

~ அன்னாசி பாயசம் ~
« on: November 10, 2016, 10:19:08 PM »
அன்னாசி பாயசம்



ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர்- 2 கப்
அன்னாசிபழம் – 2 கப் பால்பண்ணை
சூடான பால் – 500 மில்லி
சர்க்கரை – 1/2 கப் + 1/4 கப்
மஞ்சள் புட் கலர் – சிறிது

ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு பிரஷர் குக்கரில் எடுத்து 1 விசில் விட்டு இறக்கவும். ஜாரில் அன்னாசிபழம் பாதியை எடுத்து நன்றாக அரைத்து வைக்கவும். மீதியை அரைத்து வைத்த ஜூஸில் போட்டு அவை கெட்டியாகும் வரை சமைக்கவும். சமைத்த பின் அதில் சர்க்கரை, மஞ்சள் புட் கலர் சேர்த்து கலந்து வைக்கவும். இப்போது பால் எடுத்து நன்றாக கொதிக்கவிட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பின் ஒரு கடாயில் ஜவ்வரிசியை எடுத்து சர்க்கரை மற்றும் சூடான பால் சேர்த்து கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அன்னாசி கலவை அதனுடன் சேர்த்து சில்லென பரிமாறவும்.