Author Topic: கனவில் வந்த இறைவன்  (Read 634 times)

Offline thamilan

கனவில் வந்த இறைவன்
« on: October 10, 2016, 09:31:34 PM »
நேற்று தவறுதலாக
கடவுள் என் கனவில் வந்தான்

"என்ன ஆச்சரியம் இறைவா !!
தேடினாலும் கிடைக்க மாட்டாய் நீ
இப்படித்தான்
எதிர் பாராமல் சிக்கிக் கொள்கிறாய்"

" உன்னிடம் பேச வேண்டும் என்று
நினைத்தேன்
பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல்
தவிக்கிறேன்
பதில் சொல்வாயா?"
கண்ணீரைப்போல பொங்கி வந்தன
கேள்விகள்

உலகத்தை படைத்த நீ
அதற்கு ஏன்
அழிவையும் படைத்தாய்?.......
மனிதனை படைத்தது
ஏன் மரணத்தையும் படைத்தாய்?......
இன்பத்தை படைத்த நீ
ஏன் துன்பத்தையும் படைத்தாய்?.....
சுதந்திரத்தை படைத்த நீ
ஏன் அடிமைத்தனத்தையும் படைத்தாய்?.......
உண்மையை படைத்த நீ
ஏன் பொய்யையும் படைத்தாய்?.....
அழகை படைத்த நீ
ஏன் அசிங்கத்தையும் படைத்தாய்?.....
அன்பை படைத்த நீ
ஏன் பகையை  படைத்தாய்?.....

இறைவன் சிரித்தான்
" உன் கேள்வியிலேயே
அதற்கான பதிலும் இருக்கிறது
நீ கேட்ட கேள்விகளை
கீழிருந்து மேலாகப் பார்
பதில் கிடைக்கும் " என்றான்

"அது சரி
கடைசியாக ஒரு கேள்வி?.....
நீ
இந்துவா? முஸ்லிமா? இல்லை
கிறிஸ்தவனா?".....

கடவுள் பதில் சொல்லாமல்
பதில் சொல்ல தெரியாமல்
மறைந்து  விட்டான் !!!!


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: கனவில் வந்த இறைவன்
« Reply #1 on: October 10, 2016, 10:28:24 PM »
Hi Thamilan.....
arumaiyaana kavithai....
vaazhthukal....

En manaottam....thavaru irunthaal manikkavum....
iraivan padaithathirku bathil sonnar....
manikkavum thangalin kelvileye bathil koduthuvittar...

Avar padaithiraathathai ...kettal...bathil solla iyaluma thozhare....
Bathil solla teriyaamal alla....virumbaamal
marainthiruppaar kadavul....

Otrumaiyaaga seiyalpaduvom endru nambi
iraivan potta kannaku.....
manithargalal kootti kalikka pattu pirivaiye
nilainaattiyathu.....
athai thirutha mudiyaamal thavikum iraivan...
indru ungal mun bathil solla teriyaathavanai nirkirar.....
 :)
anbin vadive kadavul...hindu vum alla...muslim um alla....kristianum alla...
nandri.....
thavarugal irunthal mannikavum....
thangalin kavithaiyai rasithu padithen...
meendum terinthe kanavil kadavul
varatum...intha moorai kelvi ketkaathir....
nandri kurungal..... ;)


Offline thamilan

Re: கனவில் வந்த இறைவன்
« Reply #2 on: October 10, 2016, 11:48:01 PM »
ரித்திகா
இது வெறும் கற்பனையே . நமக்கு தெரியாததை நாம் யாரிடம் கேட்பது?
ஒரு கவிதையில் ஏதும் சந்தேகம் வந்தால் அதை எழுதியவனிடம் தானே  கேட்க முடியும், நீங்கள் கேட்டது போல. அதை போல படைப்பில் உள்ள குறைகளை அதை படைத்தவனிடம் தானே கேட்க முடியும். அவரால் தான் சந்தேகங்களை தீர்க்க முடியும். படைப்பின் பொருள் அறியாமல் தானே மனிதர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். யார் உணமையான கடவுள் எந்த மதம் உண்மையானது இது தானே உலகில் பல பிரச்சனைகளுக்கு காரணம்?
சந்தேகத்தை கடவுளிடம் மட்டும் தான் கேட்க முடியும்  மனிதர்களிடம் கேட்டால் சண்டை தான் வெடிக்கும்.
கடவுளுக்கு நன்றி சொல்லுவதால் மட்டும் பயன் இல்லை ரித்திகா. அவன் படைத்த படைப்பை பயனுள்ளதாக,கடவுளுக்கு உகந்த வகையில்  வாழ்வது கூட நன்றி சொல்லுவததற்கு சமானம்

anbin vadive kadavul...hindu vum alla...muslim um alla....kristianum alla...
nandri.....

நான் கவிதையில் சொல்ல வந்ததும் இது தான். கடவுள் மனிதனை படைத்தான் . மனிதன் தான் மதங்களை படைத்தான். தனக்கு தேவையான வகையில் கடவுளுக்கு பெயர்களையும் வைத்துக்கொண்டான். இல்லாத ஒன்றை ஒருவனிடம் கேட்டல் பதில் சொல்ல முடியுமா? இதுவே எனது கவிதையில் முடிவில் நான் சொன்னது.
« Last Edit: October 11, 2016, 07:15:42 AM by thamilan »

Offline SweeTie

Re: கனவில் வந்த இறைவன்
« Reply #3 on: October 11, 2016, 05:52:03 PM »
அட பக்தா ....உனக்கு கொஞ்சம் மூளையை அதிகமாக
 வைச்சு படைக்கும்போதே   நினைச்சேன்  ஒருநாள் இந்த கேள்வி  நீ என்னை  கேட்பாய் னு. 

Offline thamilan

Re: கனவில் வந்த இறைவன்
« Reply #4 on: October 11, 2016, 07:35:15 PM »
ஸ்வீட்டி
எல்லோருக்கும் தான் மூளையை இறைவன் படைத்தான்.
எனக்கு கொஞ்சம் மூளையை பாவிச்சி சிந்திக்கிற தன்மையை கொடுத்திட்டான் அவ்வளவு தான்

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: கனவில் வந்த இறைவன்
« Reply #5 on: October 12, 2016, 10:28:19 AM »
ஒரு படைப்பில் இத்தனை கேள்விகள்?.. எல்லாருக்கும் உள்ள கேள்வி இது தான். நானும் பல நாள் யோசித்ததுண்டு..  ஏன் வித்தியாசங்களை, படைத்தார் அளித்தார், இன்பம் துன்பம் ,பிறப்பு இறப்பு.நம்முள் கடவுள் இருக்கிறார். நமக்கே கேட்க வேண்டிய கேள்விகள். பதிலும் நாம் தானே சொல்ல வேண்டும். கடவுள் ஒரு ஒளிவட்டம் , மனிதர்கள் தான் பிரித்தார்கள்.. ஹிந்து முஸ்லீம் கிறிஸ்டியன் .. எப்போது மனிதன் ஒற்றுமை ஆகிறானோ .. அப்போது எல்லா கேள்விகளும் பதில் கிடைக்கும்.
நான் சம்பந்தம் இல்லாம பதில் அளித்திருந்த மன்னிக்கவும். தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்கிறேன். நன்றி

Offline thamilan

Re: கனவில் வந்த இறைவன்
« Reply #6 on: October 12, 2016, 07:01:58 PM »
BB உங்கள் கருத்துக்கள் சரியானவையே. கடவுள் மனிதனை படைத்தார். மனிதன் மதங்களைப் படைத்தான். எந்த மதத்தவரையும் கேளுங்கள் இறைவன் ஒருவனே என்று அடித்து கூறுவார்கள். இறைவன் ஒன்றென்றால்,எதற்கு இத்தனை மதங்கள்?
 இறைவன் அன்பானவன், அவர் இந்துவும் இல்லை, முஸ்லிமும் இல்லை, கிறித்தவனும் இல்லை என்று ரித்திகா சொன்னார்கள். நீங்களும் அவர் ஒளிவட்டம் என்று சொல்கிறீர்கள். உங்கள் இருவரது கூற்றையும் நான் ஆமோதிக்கிறேன். சரி கடவுளுக்கு எந்த மதமும் இல்லை என்று கூறும் நீங்கள் எதற்காக ஒரு மதத்தை சார்ந்து இருக்கிறீர்கள்? நீங்கள் இருவரும் ஒன்றில் இந்துவாக இருப்பிர்கள் அல்லது கிறிஸ்தவர்களாக இருப்பீர்கள், இல்லையா?
கடவுளுக்கு எந்த மதமும் கிடையாது என்று சொல்லும் நீங்கள் எதற்காக ஒரு மதத்தை வைத்து கடவுளைக் கும்பிடுகிறீர்கள்?
புரியவில்லை எனக்கு. நானும் உங்களை போல ஒரு மதத்தை சார்ந்தவன் . கடவுளுக்கு என்று ஒரு மதம் இல்லையென்றால், நாம் ஏன் ஒரு மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்?
இதற்கு விடை சொல்ல நம்மால் முடியாது அதனால் தான் இறைவனிடமே கேட்டேன்
.