Author Topic: நா.முத்துக்குமார் ..  (Read 402 times)

Offline JerrY

நா.முத்துக்குமார் ..
« on: September 29, 2016, 11:18:39 AM »
கவி மேல உனக்கு ஆசை ..
கவி அரசுக்கே உன் மேல
பேராச ..

தமிழ் வந்து தாழ் போட
அத தாலாட்டி நீ
துங்கவச்ச ..

ஊர் எல்லாம் உன் பேச்சி
உறவுக்கெல்லாம் சொல்லியாச்சி
பட்டாம்பூச்சி செத்துபோச்சி ..

உன் விரல் முனைய வெட்டிகொடு ..
எரிதழல்ல உடலை மட்டும் விடு ..

கவி எழுத உன் விரல் வேண்டும்
காவிய தமிழ் கண்ணகியாக
எரித்து விட்டது உன் உடலை மட்டும்

கவி மடிந்ததா , கவிதை மடிந்ததா ..

நீயுட்டனின் மூன்றாம் விதியே ..

இவன் ..

இரா. ஜகதீஷ் ..