Author Topic: Re: Hi Friends Intha Padinga Ungaluku Use Agum nu Ninaikaren  (Read 340 times)

Offline SanSa

Re: Hi Friends Intha Padinga Ungaluku Use Agum nu Ninaikaren
« on: September 24, 2016, 09:30:14 PM »
தக்காளிக்கு மாற்று...
சில கெட்சப் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக லாப நோக்கத்தில் தக்காளிக்கு பதிலாக பப்பாளி விதைகள் மற்றும் முலாம்பழம் சேர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் சாதா கெட்சப் அனைத்துமே இப்படி தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இவற்றில் அளவுக்கு அதிகமாக கலரிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது.கலரிங் ஏஜென்ட்!
கெட்சப் தயாரிப்பில் தரம் மற்றும் சுகாரத்தம், அதை பாட்டிலில் அடைப்பது வரை சரியாக பார்க்கப்படுவதில்லை. முக்கியமாக இதில் சேர்க்கப்படும் கலரிங் ஏஜென்ட் நாள்பட அலர்ஜி உண்டாக முக்கிய காரணியாக இருக்கிறது.


செயற்கை இனிப்பூட்டி!
கெட்சப்பில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மூலப்பொருளாகும்.
இதன் காரணத்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஒரு ஸ்பூன் கெட்சப் மூலம் 30 கலோரிகள் சர்க்கரை மூலம் மட்டுமே உடலில் சேர்கிறது.


சத்துக்கள் ஏதுமில்லை!
தக்காளியில் இருந்து கிடைக்கும் முக்கிய சத்தே வைட்டமின் மற்றும் நார்ச்சத்து தான். ஆனால், கெட்சப் தயாரிப்பின் போதும், பிராசஸிங் செய்யப்படும் போது இவை இரண்டுமே பாதிக்கப்படுவதால், நீங்கள் வெறும் கலோரிகளாக மட்டுமே கெட்சப்பை உட்கொள்கிறீர்கள்.


யாரெல்லாம் கெட்சப் பயன்படுத்த கூடாது?
உடல் பருமன், அலர்ஜி, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கெட்சப்பை பயன்படுத்தக் கூடாது.


குறிப்பு!
என்றேனும் பார்ட்டி, ஹோட்டல் என்றால் கெட்சப் பயன்படுத்துவது தவறல்ல, இதனால் பெரிதாக எந்த தாக்கமும் உண்டாகாது. ஆனால், தினமும் வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.
இதற்கு பதிலாக, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவற்றை வீட்டிலே தயாரித்து பயன்படுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.