Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா ~ (Read 427 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226689
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா ~
«
on:
September 20, 2016, 09:44:45 AM »
கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா
ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
நீரிழிவை விரட்ட
அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
அல்சைமர் நோயைத் தடுக்க
ஆப்பிளில் குவெர்செட்டின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. இது அல்சைமர் என்னும் மோசமான நரம்பு வியாதியைத் தடுப்பதில் வல்லது.
கண் புரையைத் தவிர்க்க
ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.
சருமப் பாதுகாப்பிற்கு
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் டாக்டரிம் போகத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அழகுக் கலை நிபுணரிடம் செல்வதையும் தவிர்க்கலாம். ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன
சீரான சுவாசத்திற்கு
ஆப்பிளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனைகளை அடியோடு விரட்டுகின்றன. மூக்கில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கி, சீரான சுவாசத்திற்கு இது வழிவகுக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க
பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.
புற்றுநோயை விரட்டுவதற்கு
ஆப்பிள் பழத்தில் உள்ள குவெர்செட்டின் மற்றும் ட்ரைடெர்பினாய்டுகள் ஆகியவை, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
எலும்பு பாதுகாப்பிற்கு
ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை, எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
எடை குறைப்பிற்கு
ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள பாலிபீனால் மற்றும் பெக்டின் ஆகியவை இந்த வேலையை செய்கிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா ~