Author Topic: ~ பனானா சாக்லேட் மில்க் ஷேக் ~  (Read 342 times)

Offline MysteRy

பனானா சாக்லேட் மில்க் ஷேக்



தேவையானவை:

(1 நபருக்கு)

பச்சை வாழைப்பழம் – 1

சர்க்கரை சேர்க்கப்பட்ட சாக்லேட் – 10 கி அல்லது சாக்லேட் பான தூள் – 1 மேசைக்கரண்டி

சர்க்கரை – 1 மேசைக்கரண்டி

பால் – ஒரு கப்

தேவையெனில் பனித்துண்டுகள் சில

செய்முறை:

வாழைப் பழத்தை துண்டுகளாக நறுக்கி

சர்க்கரை, சாக்லேட், பால் சேர்த்து ஜுஸரில் அரைத்துக் கொள்ளவும்.

இதை தம்ளரில் ஊற்றி மேலே பனி துண்டுகள் சேர்த்து அருந்தவும்.
 
குழந்தைகள் இதை விரும்பி அருந்துவார்கள். அதிகம் வேலை இல்லாத செய்முறை, ருசி அபாரமாக இருக்கும்.!