Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ~ (Read 385 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226706
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ~
«
on:
August 31, 2016, 08:41:04 PM »
நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.
இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக்கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.
இஞ்சியின் மருத்துவ குணங்களை அறிந்து தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை ஆராய்ந்து நிரூபித்துக் காட்டியுள்ளன.
நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
இதயநோய் வராது
தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
இதயத்தை பலப்படுத்தும்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
வலிப்பு நோயை குணப்படுத்தும் எனப் புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.
சமீபத்தில் இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.
மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982 –ம் ஆண்டில் கண்டுபிடித்தது.
இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.
இரத்தத்தை இதயம் ஒழுங்காக அனுப்ப பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தை போலவே, இஞ்சியும் இரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் இரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும் கூட இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.
இவ்வளவு மருத்துவசக்தி வாய்ந்த இஞ்சியைப் பற்றிய அதிசய உண்மைகள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனில் இஞ்சியின் சிறப்பை அன்றே எடுத்துக் கூறி இருப்பதைக் கண்டு நமக்கு அதிசயமாக உள்ளது.
உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்கு தருகிறேன்.
இஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.
பசியை உண்டாக்கும் இஞ்சி சாறு
இஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும்.
இஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம்.
இருமல் குணமாகும்
இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.
உடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம்
இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.
வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி
இஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும்.
உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்
இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சுலபமாக மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வேண்டும்போது 1 ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை மதியம் மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.
வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்
இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான், சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மி.லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 1 ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.
தலைவலிக்கு இஞ்சி
இஞ்சி சாறு ஓரிரு சொட்டுக்கள் மூக்கில் துளியாக விட்டால் தலைவலி குணமாகிவிடும்.
பல்வலிக்கு இஞ்சி
இஞ்சி துண்டை பல் வலியுள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலி மட்டுப்படும்.
தொந்தி குறைய இஞ்சி சாறும், தேனும்
வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
செய்முறை
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.
சாப்பிடும் முறை
காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு : சாப்பிடும் சமயம் சிலருக்கு உஷ்ணமாக வயிற்று போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள் இஞ்சி மருந்து அளவை மிக குறைவாக சாப்பிடுவது நல்லது.
மஞ்சள் காமாலை ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ்
நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை ஆஸ்துமா சளி இவற்றை நீக்க வல்லது.
புற்று நோயிலிருந்து பாதுகாப்பு
தொடர்ந்து மேற்சொன்ன இஞ்சி ஜூஸ் தினமும் அருந்துபவர்களுக்கு நாக்கு, தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்
தேவையான மூலிகை பொருட்கள்
(மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்)
இஞ்சி சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்
மேற்கண்ட மருந்துகளை மூலிகை மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக் கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவைகளை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை 250 மி.லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சி சாற்றை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு, மற்ற மருந்து பொருட்களை போட்டு இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றி கிண்டி உடன் வேறு பாத்திரத்தில் வைக்கவும். மருந்தின் காரம் அதிகமாக இருந்தால் மொத்த மருந்தில் மேலும் 150 மி.லி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
சாப்பிடும் முறை
காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.
பசியை கொடுக்கும் இஞ்சி
இஞ்சியை கழுவி மேல்தோலை எடுத்துவிட்டு வில்லைகளாக நறுக்கி உலர வைத்துவிட வேண்டும். பின்பு எலுமிச்சம் பழச்சாற்றில் தேவையான அளவு இந்துப்பு போட்டு, இஞ்சித்துண்டுகளைக் கலந்து ஊற வைக்க வேண்டும். இவற்றை வெயிலில் உலர்த்தி கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு காலையில் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டு வரலாம். இதனால் பலவகையான நோய்கள் குணமடைவதுடன், புளி ஏப்பம், வாந்தி, மயக்கம், வயிறு உப்புசம், அஜீரணம் நீங்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ~