Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ வெயில் கால பாட்டி வைத்தியம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வெயில் கால பாட்டி வைத்தியம் ~ (Read 476 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226708
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வெயில் கால பாட்டி வைத்தியம் ~
«
on:
August 25, 2016, 08:33:03 PM »
வெயில் கால பாட்டி வைத்தியம்
வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.
வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.
விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.
முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.
மஞ்சள், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.
மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.
புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.
நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.
கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.
திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ வெயில் கால பாட்டி வைத்தியம் ~