Author Topic: Tips get chubby cheeks  (Read 1053 times)

Offline RemO

Tips get chubby cheeks
« on: February 01, 2012, 09:29:47 AM »
முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரையாகும்.

பள பளக்கும் பட்டுக் கன்னம்


தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தோடு கன்னங்கள் புஷ்டிக்கும் அவசியமாகிறது.காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.

சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதனால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்பு கூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பைம் தரும்.

புசு புசு கன்னம்


ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும். அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.

மஞ்சள் அதிகம் போடுவதை சற்று குறைத்துக் கொள்ளவது கன்னத்தின் அழகை வறட்சியாக்குவதை தடுக்கும்.

ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

சத்தான உணவு, உறக்கம்


பால்,முட்டை, மீன், இறைச்சி,வெண்ணெய்,நெய்,வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.