Author Topic: ~ வெங்காயம் சேர்த்த ரசம் ~  (Read 349 times)

Offline MysteRy

வெங்காயம் சேர்த்த ரசம்



புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – ஒன்று
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
தனியா – அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 4 பல்
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – 10
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – 6

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
புளி முதல் கறிவேப்பிலை வரை உள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, (பூண்டு வாசனை பிடித்தவர்கள் ஒரு பல் பூண்டை நசுக்கிப் போடலாம்) அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான வெங்காயம் சேர்த்த ரசம் தயார்.