Author Topic: ~ அப்பள கூட்டு ~  (Read 337 times)

Offline MysteRy

~ அப்பள கூட்டு ~
« on: August 14, 2016, 10:55:22 PM »
அப்பள கூட்டு



அப்பளம் – 4
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கடலை பருப்பு – கால் கப்
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – 2
இஞ்சி – அரை அங்குல துண்டு
தேங்காய்த் துருவல் – கால் கப்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் சோம்பையும் மிக்ஸியில் போட்டு 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதனுடன் இஞ்சி துண்டு, தக்காளி, உப்பு போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கி விடவும்.
அதில் ஊற வைத்த கடலை பருப்பை போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்றாகப் பிரட்டி விடவும்.
அதன் பிறகு தேங்காய் விழுது சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி சிறிது கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அப்பளத்தை துண்டுகளாக உடைத்து போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து பாத்திரத்தின் மூடியை திறந்து அதில் பொரித்து வைத்திருக்கும் அப்பளத்தை போட்டு கிளறி, 3 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
காய்கறிகளை வைத்து செய்யும் கூட்டுகளை விட சுவையில் சற்று வித்தியாசமான அப்பள கூட்டு இப்போது தயார். இந்த குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. ஸ்ரீதேவி விஜயசேகர் அவர்கள்.