Author Topic: ~ மசாலா மட்ரி ராஜஸ்தானியர் மாலை நேர டீ ஸ்நாக் ~  (Read 350 times)

Offline MysteRy

மசாலா மட்ரி ராஜஸ்தானியர் மாலை நேர டீ ஸ்நாக்



மாவிற்கு…

மைதா – 2 கப்,
கோதுமை மாவு – 1/2 கப்,
ரவை – 1/4 கப்,
கடலை மாவு – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
மாவில் பிசைய எண்ணெய்/நெய் – 1/2 கப்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி – 2 டீஸ்பூன்.

கரகரப்பாக அரைக்க…

மிளகு – 10,
லவங்கம் – 4,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
முழு தனியா – 1 டீஸ்பூன் இடிக்கவும் அல்லது மிக்சியில் பொடிக்கவும்.

எப்படிச் செய்வது?

ஒரு பெரிய பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். இத்துடன் கையில் கசக்கிய ஓமம், கஸ்தூரி மேத்தி, உப்பு (எல்லா மாவையும் ரவையுடன் சேர்த்து), இதில் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ரவை மாவாக பிசைய வேண்டும் (பிரெட் தூள் போல்). பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பூரி மாவை விட கெட்டியாக பிசைந்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி 20 நிமிடங்கள் வைத்து பின் மீண்டும் பிசையவும்.
இப்போது மட்ரி செய்யலாம். கொடுத்துள்ள மாவில் 32-35 மட்ரிகள் வரும். மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, இரண்டு கைகளினால் உருட்டி, உள்ளங்கையில் வைத்து மிதமாக அழுத்தி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து மட்ரிகளை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து ஆறவிட்டு பரிமாறவும்.

குறிப்பு:

ரொட்டியை கட்டையால் உருட்டுவதாக இருந்தால் உருட்டி முள் கத்திக் கொண்டு மாவின் மத்தியில் குத்திப் பொரிக்கவும். ஊறுகாயுடன் இதனை பரிமாறலாம். 1 மாதம் வரை இருக்கும்.